சேரன் வாக்குவாதம் செய்த பேருந்து.. போலீசார் விதித்த பெரிய அபராதம்!
இயக்குனர் சேரன் சமீபத்தில் தனது காரில் கடலூர் சென்றபோது அவர் பின்னால் வந்த தனியார் பேருந்து ஹார்ன் அடித்துக்கொண்டே வந்ததால் கடும்கோபம் ஆன சேரன் கீழே இறங்கி அந்த பேருந்து ஓட்டுநர் உடன் சண்டை போட்டிருக்கிறார்.
அந்த வீடியோ வெளியாகி சர்ச்சை ஆனது.
பேருந்துகளுக்கு அபராதம்
இந்த சம்பவம் வைரல் ஆன நிலையில் கடலூரில் இயங்கும் சுமார் 20க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் ஏர் ஹாரன் பயன்படுத்தியதற்காக ஒவ்வொரு பேருந்துக்கும் தலா 10 ஆயிரம் ருபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் சேரன் நடுரோட்டில் இறங்கி வாக்குவாதம் செய்த வீடியோவை வெளியிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் புகார் அளித்து இருக்கிறது என செய்தி பரவி வருகிறது. ஆனால் அந்த செய்தி உண்மையில்லை என அவர்கள் அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர்.
சேரன் செய்தது தான் சரி என அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.


பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
