போலீசிடம் சிக்கிய நாக சைதன்யா.. அபராதம் விதிப்பு! காரணம் இதுதான்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரும், சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யா இன்று காரில் சென்றபோது போலீசிடம் சிக்கி இருக்கிறார்.
நாக சைதன்யா
சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவகாரத்தை அறிவித்த பிறகு தங்கள் கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். விவாகரத்து பற்றி பேசி இருந்த நாக சைதன்யா 'சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சி தான்' என கூறி இருந்தார்.
தற்போது தெலுங்கில் மட்டும் நடித்து வரும் அவர் விரைவில் ஹிந்தி சினிமாவிலும் களமிறங்க இருக்கிறார்.

போலீஸ் அபராதம்
இந்நிலையில் இன்று நாக சைத்தாயா அவரது டொயோட்டா vellfire காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது காரை போலீசார் நிறுத்தி இருக்கின்றனர். தடை செய்யப்பட்ட black tint கண்ணாடியில் ஒட்டப்பட்டு இருக்கிறது என கூறி அவருக்கு அபராதம் விதித்து இருக்கிறது.
அபராத தொகை 715 ரூபாயை செலுத்திவிட்டு, கண்ணாடியில் இருக்கும் டிண்ட் நீக்கப்படும் என வாக்குறுதி கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.