போலீஸ் போலீஸ் வெப் தொடரின் சீசன் 2.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By Karthick Raja Nov 25, 2026 03:34 AM GMT
Report

Police police season 2: மிர்ச்சி செந்தில், ஜெய்சீலன் நடிப்பில் போலீஸ் போலீஸ் வெப் தொடரின் சீசன் உருவாகிறது என ஜியோ ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

போலீஸ் போலீஸ் வெப் தொடரின் சீசன் 2.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Police Police Season 2 On Jio Hotstar

போலீஸ் போலீஸ்

ஹார்ட் பீட், கோர்ட், Brothers and Sisters என ஜியோ ஹாட்ஸ்டாரில் பல்வேறு கதையம்சங்கள் கொண்ட தமிழ் வெப் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், கடந்த ஆண்டு காவல் துறையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட வெப் தொடர்தான் போலீஸ் போலீஸ். மிர்ச்சி செந்தில், ஜெய்சீலன், ஷபானா, சத்யா, ஜனனி, பார்வதி உள்ளிட்ட பலரும் இந்த வெப் தொடரில் நடித்துள்ளனர்.

போலீஸ் போலீஸ் வெப் தொடரின் சீசன் 2.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Police Police Season 2 On Jio Hotstar

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்த போலீஸ் போலீஸ் வெப் தொடர், இந்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவடைந்தது. இதன்பின், இந்த வெப் தொடரின் சீசன் 2 எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கான பதில் தற்போது கிடைத்துவிட்டது.

நடிகர் அர்ஜுன் புகார்.. பயில்வான் ரங்கநாதன் மீது பாய்ந்த வழக்கு

நடிகர் அர்ஜுன் புகார்.. பயில்வான் ரங்கநாதன் மீது பாய்ந்த வழக்கு

இரண்டாவது சீசன்

இந்த நிலையில், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, ஜியோ ஹாட்ஸ்டார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், போலீஸ் போலீஸ் சீசன் 2 விரைவில் என First லுக் போஸ்டருடன், "உள்ளேயும் வெளியேயும்… வேட்டை தொடர்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US