நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்தியபடி போலீஸ் பாதுகாப்பு.. ஷாக்கிங் நியூஸ்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருவர் நடிகர் சூர்யா.
இவர் நடிப்பில் சமீபத்தில் ஜெய் பீம் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது.
இப்படம் வெளியான நாளில் இருந்து இன்று வரை நடிகர் சூர்யாவிற்கும், அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கும் பல எதிர்ப்புகளும், மிரட்டல்களும் வந்துகொண்டு இருக்கிறது.
மேலும், நடிகர் சூர்யா தங்களிடம் மன்னிப்பும், நஷ்டஈடாக ரூ. 5 கோடியும் தரவேண்டும் என்று குறிப்பிட்ட ஒரு ஜாதி அமைப்பு கூறியிருந்தது.
இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவிற்கு திரையுலகினரின் சார்பிலும், ரசிகர்கள், மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஆதரவு கிடைக்க துவங்கியது.
இந்நிலையில் இன்று, தி நகரின் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்தியபடி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக ஷாக்கிங் நியூஸ் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் தற்போது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.