எதிர்ப்புகளை தாண்டி வெளிவந்த 'தி கேரளா ஸ்டோரி'.. ஆதரவு தெரிவிக்கும் பிரபல கட்சி! படம் பார்த்தவர்களின் ரிவ்யூ
தி கேரளா ஸ்டோரி
"தி கேரளா ஸ்டோரி" திரைப்படம் சுகிப்தோ சென் இயக்கத்தில் மே 5ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வெளிவந்தது. இப்படத்தின் ட்ரைலர் வெளியான பொழுதே பல சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டது. இருப்பினும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருவதாக கூறப்படுகிறது.
இப்படம் முழுவதும், முஸ்லீம் பெண்களுடன் நட்பாக கூட பழகக்கூடாது எனும் நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம். இதனால் இஸ்லாமிய கட்சிகள் இப்படம் திரையரங்குகளில் வெளிவரக்கூடாது என பெரும் எதிர்ப்பு தெரிவித்தன்னர்.
இப்படத்திற்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவிப்பவர்கள்:
இப்படத்தில் பெண்கள் முஸ்லிமாக மாற்றப்பட்டு அவர்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறார்கள் எனும் கதை பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் நட்பாக பழகும் இந்தியாவில் இப்படி ஒரு படம் அவநம்பிக்கையை ஏற்படுத்துவது போல் உள்ளது.
மேலும் கேரளாவில் இந்து மற்றும் முஸ்லீம் நண்பர்களாக பழகி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் இப்படத்திற்கு "தி கேரளா ஸ்டோரி" என பெயர் வைத்தது மட்டுமின்றி 32,000 பெண்கள் இதுவரை மாட்டிக்கொண்டுள்ளனர் என கூறுவது பெரும் அபத்தமாக கருதப்படுகிறது. ஆனால் இப்படத்தை பாராட்டிய பிரபல கட்சியினால், இஸ்லாமிய கட்சிகளுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
இஸ்லாமிய கட்சிகள் இத்திரைப்படத்தின் ட்ரைலர் பார்த்த பிறகு இப்படம் மத ஒற்றுமையை சீரழிக்கும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம். இதனை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். ஆனால் இப்படத்திற்கு தடை விதிக்கப்படாததால் கேரளா அரசு இப்படத்தை யாரும் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்துகிறது.
தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் எதிர்ப்புகள் எழுந்த போதும் திரையரங்குககளில் இப்படம் வெளிவந்தது. இருப்பினும் மேற்கு வங்க அரசு இப்படம் வெளியிடுவதற்கு தடை விதித்தது.
ஆனால் படத்தின் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் போட்ட மனுவை ஒட்டி மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் "ஏன் படம் திரையிட தடை விதிக்க வேண்டும்? மேலும் அனைத்து விதமான மக்கள் வசிக்கும் இந்தியாவில் பல இடங்களில் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. படம் நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாதுகாப்புடன் படம் திரையரங்குகளில் திரையிட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது."
இப்படம் பார்த்த பிறகு குஜராத்தை சேர்ந்து இஸ்லாமியரை திருமண செய்வதாக இருந்த பெண் தன்னுடைய திருமணத்தை நிறுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முஸ்லீம் உடன் நண்பராக கூட பழக கூடாது போன்ற மத வெறியை இப்படம் வெளிப்படுத்துகிறது என கூறினாலும் மக்களிடையே இரண்டு விதமான நம்பிக்கை உள்ளது.
கோயம்பத்தூரில் உள்ள பிரபலமான ப்ரூக் பில்டில் மாலில் பல சர்ச்சைகளிலும் ஒரு ஷோ மட்டும் திரையிடப்பட்டது. அதில் 52 பேர் மட்டும் படத்தை முன்பதிவை செய்து பார்த்தனர். படம் பார்த்து வந்தவர்கள் இப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்றும், இந்த படத்தில் எந்த ஒரு நெகடிவ் அப்ரோச் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இப்படத்தில் இந்து முஸ்லிமாக மதம் மாறுவதும் மற்றும் கல்லூரி பெண் காதல் வலையில் மயங்கி ஏமாந்துபோவது தான் கதை. இது நல்ல படம் என்று கருத்தை தெரிவித்தனர். படத்தை படமாக பார்க்கும் வரை அது யாரையும் பாதிப்பது இல்லை. ஆனால் இப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுத்த படம் என்று கூறுவதே சர்ச்சைக்கு உள்ளாக்கியது.
ஒரு இரவுக்கு 1 லட்சம் ரூம் புக் செய்து 2வது மனைவியுடன் ஜாலியாக இருக்கும் சீரியல் நடிகர் ப்ருத்விராஜ்- இவ்வளவு பிரம்மாண்டமான அறையா?