பிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமாருக்கு வந்த மிரட்டல்- நடிகை கொடுத்த பதிலடி
பிக்பாஸ் 6 விக்ரமன்
பிக்பாஸ் 6வது சீசனில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபலம் விக்ரமன்.
விளையாட்டுக்கு விளையாட்டு, மற்றவர்களை மதிப்பது, பிரச்சனை வரும்போது குரல் கொடுப்பது, சில முக்கிய அரசியல் விஷயங்களை பகிர்வது என மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் விக்ரமன்.
இவர் தான் பிக்பாஸ் 6வது சீசனின் வெற்றியாளர் என ரசிகர்கள் நம்புகிறார்கள், ஆனால் பிக்பாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக மக்கள் வெயிட்டிங்.
வனிதா பதிவு
விக்ரமன் ஒரு குறிப்பிட்ட கட்சியில் உறுப்பினராக இருப்பது நமக்கு தெரிந்தது தான், அண்மையில் அக்கட்சியின் தலைவரும் விக்ரமனுக்காக பதிவு போட்டார்.
இதுகுறித்து வனிதா விஜயகுமார், திருமாவளவனின் பதிவை குறிப்பிட்டு எப்படி ஒரு அரசியல் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தன்னுடைய ஆதரவாளர்களை தூண்டிவிட்டு ஒரு ரியாலிட்டி ஷோவுக்கு வாக்களிக்க செய்ய முடியும் என கேள்வி எழுப்பி வந்தார். ‘
வனிதாவின் இந்த பதிவிற்காக அக்கட்சியினர் நடிகைக்கு மிரட்டல் விட்டுள்ளனராம், இதனை அவரே கூறியுள்ளார்.
Oru biggbossle jaikradhuke ivalavu arajagamna election varumbothu ennalam seiyuvanga ivangala mathiri political parties.. you do your politics where u have to I never disturbed you.. you stop disturbing our entertainment profession ?
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) January 19, 2023