இந்த பிரபல பிக்பாஸ் நடிகருக்கு இயக்குனர் வெற்றிமாறன் டப்பிங் கொடுத்துள்ளாரா ! யார் பாருங்க..
இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் மிக சிறந்த இயக்குனராக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான அசுரன் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.
மேலும் இப்படத்திற்காக நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தேசிய விருதினை வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் பிரபல நடிகர் ஒருவருக்கு டப்பிங் கொடுத்துள்ளது எத்தனை பேருக்கு தெரியும். ஆம் பொல்லாதவன் திரைப்படத்தில் நடிகர் செண்ட்ராயனுக்கு டப்பிங் கொடுத்துள்ளார்.
இதனிடையே அந்த படத்தின் காட்சி வீடியோ ரசிகர்களிடையே பரவி வருகிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
— Shittier Tamil Movie Details (@TamilDetails) December 1, 2021