சிகிச்சைக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த முக்கிய நடிகர்!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் வரலாற்று திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி என ஏராளமான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியானது, அதில் PS-1(பொன்னியின் செல்வன்) படத்தின் முதல் பாகம் 2022-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது குவாலியரில் நடைபெறும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளார்.
சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்த நிலையில் தற்போது கட்டுப்போட்டு கையுடன் கார்த்தி மற்றும் மணிரத்னம் உடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
BACK to work .. landed in Gwalior with #Maniratnam sir @Karthi_Offl on our way to Orchha for #PonniyinSelvan .. pic.twitter.com/0RjfonSc4l
— Prakash Raj (@prakashraaj) August 18, 2021