பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து வெளியான புதிய தகவல், உற்சாகத்தில் ரசிகர்கள்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி என ஏராளமான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியானது, அதில் PS-1(பொன்னியின் செல்வன்) படத்தின் முதல் பாகம் 2022-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் நேற்று இப்படத்தில் முக்கிய நடிகர்கள் நடித்துள்ள கதாபாத்திரங்கள் குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் பரவி வந்தது.
இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களை சேர்ந்து இப்படத்தில் மொத்தம் 12 பாடல்கள் அமைந்துள்ளதாம்.
இளங்கோ கிருஷ்ணன் - 8 பாடல்கள், கபிலன் - 2 பாடல்கள், கபிலன் வைரமுத்து - 1 பாடல், வெண்பா கீதாயன் - 1 பாடல் என அனைவரும் இப்படத்தில் மொத்தம் 12 பாடல்களை எழுதியுள்ளனர்.