பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குவிந்த நட்சத்திரங்கள், யாரெல்லாம் தெரியுமா ?
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன், இப்படத்தில் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
மேலும் இரண்டு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தை ஒரே நேரத்திலேயே படமாக்கி வருகிறார்கள், சமீபத்தில் PS 1 முதல் பாகத்தின் போஸ்டர் வெளியாகியிருந்தது.
கொரோனா 2-வது அலையால் நிறுத்தி வைத்த படப்பிடிப்பு இப்போது மீண்டும் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது. அனைத்து நடிகர்- நடிகைகளையும் வைத்து ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
இந்த படப்பிடிப்பில் பங்கேற்க விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, அர்ஜூன் சிதம்பரம், லால், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகளும், துணை நடிகர்களும் ஐதராபாத் படப்பிடிப்பு அரங்கில் குவிந்துள்ளனர்.
ஓரிரு தினங்களில் நடிகை திரிஷாவும், படப்பிடிப்பில் இணைகிறார். இதுவரை 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த வருடம் ஆரம்பத்தில் முதல் பாகத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri