பீஸ்ட் படத்திற்காக பாண்டிச்சேரி அரசு செய்த விஷயம்- வருத்தத்தில் ரசிகர்கள்
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வரும் 13ம் தேதி உலகம் முழுவதும் படு பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. நெல்சன் இயக்கும் இப்படம் ஒரு மால்லை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.
பீஸ்ட் படத்தின் அப்டேட்ஸ்
விஜய்யின் இந்த பீஸ்ட் படம் அவருக்கு 65வது படம். இது ரசிகர்கள் பெரும் ஸ்பெஷல் படமாக பார்க்கின்றனர். நேற்று கூட படத்தில் இடம்பெறும் பீஸ்ட் மோட் பாடல் வெளியாக ரசிகர்களின் பேவரெட் பாடல் லிஸ்டில் இடம்பெற்றுவிட்டது.
எல்லா இடங்களிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு தான், அதாவது டிக்கெட் முன்பதிவு எல்லாம் படு தாறுமாறாக நடந்துள்ளதாம்.
முன்பதிவிலேயே கோடி கணக்கில் படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாண்டிச்சேரி அரசு அதிரடி
பீஸ்ட் படம் வெளியாகவுள்ள நிலையில் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ள திரையரங்கிற்கு ஸ்பெஷல் உத்தரவு கொடுத்துள்ளார்களாம்.
இதனால் திரையரங்க உரிமையாளர்கள் சந்தோஷப்பட ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளார்கள்.

படு மோசமான உடை அணிந்து போட்டோ வெளியிட்ட நடிகை இலியானா- திட்டும் ரசிகர்கள்