பொங்கல் ரேஸில் வலிமையுடன் இணைந்த முக்கிய நடிகரின் திரைப்படம்! வெளியான புதிய தகவல்..
தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் திரைப்படம் வலிமை, இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
சமீபத்தில் தமிழகத்தில் பரவும் வைரஸ் தொற்று காரணத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகள் அனைத்தும் 50 % இருக்கைகளுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வலிமை திரைப்படத்துடன் RRR வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அப்படத்தின் ரிலீஸும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது வலிமை படத்துடன் பொங்கல் ரேஸில் முக்கிய நடிகரின் திரைப்படம் ஒன்று வெளியாகவுள்ளது.
ஆம் விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படத்தை வரும் 14 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வரும் என கூறப்படுகிறது.