எதிர்பாராத திருமணத்தால் பொன்னி வீட்டில் கிளம்பிய பூகம்பம்! பொன்னி C/o ராணி அப்டேட்
கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர் "பொன்னி C/O ராணி".
பொன்னியாக ப்ரீத்தி சஞ்ஜீவும், ராணியாக ராதிகா சரத்குமாரும் நடிக்கும் இந்த நெடுந்தொடரில், பவித்ராவின் காதலித்து ஏமாற்றியது சூர்யா தான் என்பது அனைவருக்கும் தெரிய வர, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க, எதிர்பாராத திருப்பமாக சுவேதாவுக்கு சந்துருவை திருமணம் செய்து வைக்கின்றனர்.
பவித்ரா பற்றிய உண்மைகளை தன்னிடம் இருந்து மறைத்தற்காக பொன்னி மீது கோபமாய் இருக்குகிறார் ராஜாராம். இதற்கிடையே கட்டாயத்தால் நடந்த திருமணத்தில் மாட்டிக்கொண்ட சந்துருவின் வாழ்கை எப்படி மாறப்போகிறது. மேலும் தொடரின் வில்லியான புஷ்பவல்லி, சந்துருவை தன்வசமாக்க முயற்சி செய்வது என தொடர் மேலும் விறுவிறுப்பாக செல்கிறது.