பொன்னியின் செல்வன் படத்தின் OTT ரிலீஸ் எப்போது?- வெளிவந்த தகவல்
பொன்னியின் செல்வன்
தமிழ் மொழியில் தயாராகி இந்திய சினிமா மொழிகளில் வெளியாகி கலக்கிவரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி அவர்கள் எழுதிய இந்த நாவலை படமாக்க எத்தனையோ கலைஞர்கள் முயற்சி செய்தார்கள்.
ஆனால் மணிரத்னம் இயக்க ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பலர் நடிக்க படம் 2022ல் பிரம்மாண்டமாக வெளியாகி விட்டது. லைகா புரொடக்ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரானதாம்.
ஓடிடி ரிலீஸ்
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இதுவரை ரூ. 460 கோடி வரை வசூலித்துள்ளது. இந்த தீபாவளி விடுமுறை நாட்களில் படத்திற்கு கூட்டம் அதிகரிக்கும் என பல திரையரங்குகளில் ஷோக்களை அதிகரித்துள்ளனர்.
இந்த நேரத்தில் தான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வந்துள்ளது. அதாவது படம் வரும் நவம்பர் 4ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
