USAவில் முதன்முறையாக தமிழ்ப்படம் செய்துள்ள சாதனை- மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்
பாதி கற்பனை, மீதி நிஜக் கதை என அவ்வளவு பெரிய கதையை எழுதி மக்கள் மனதில் நின்றவர் கல்கி. அவரின் பொன்னியின் செல்வன் நாவல் இப்போது திரைப்படமாக மாறி இருக்கிறது.
முதல் பாகம் வெளியாகிவிட்டது, ரசிகர்களும் கதையில் எப்படி உள்ளதோ அதேபோல் படமும் உள்ளது என கொண்டாடுகிறார்கள். சிலர் இப்போதே இரண்டாம் பாகத்தை வெளியிடுங்கள் என்று கூறி வருகின்றனர்.
150 நாட்களில் இரண்டு பாகங்களுக்கும் படப்பிடிப்பை முடித்த மணிரத்னம் இப்போது அடுத்த பாகத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கிவிட்டார்.
படத்தின் வசூல்
ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இதுவரை ரூ. 430 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது, விரைவில் ரூ. 500 கோடியை எட்டிவிடும் என நம்புகின்றனர். தற்போது என்னவென்றால் இப்படம் USAவில் மட்டுமே ரூ. 50 கோடியை வசூலித்துள்ளதாம்.
இதுவரை எந்த ஒரு தமிழ்ப்படமும் ஒரே இடத்தில் ரூ. 50 கோடியை வசூலித்தது இல்லையாம்.
அஜித் கையால் விருது வாங்கும் நடிகை ஜோதிகா- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
