பொன்னியின் செல்வன் 2 இதுவரையிலான மொத்த வசூல்- இன்னும் இத்தனை கோடி வந்தால் படம் ஹிட்டா?
பொன்னியின் செல்வன்
எம்.ஜி.ஆர் அவர்களின் காலத்தில் இருந்து பலர் படமாக்க முயற்சித்த ஒரு நாவல் தான் பொன்னியின் செல்வன். அதன்பிறகு பலர் முயற்சிக்க கடைசியில் மணிரத்னம் அவர்களால் முடிந்துள்ளது.
ஏன் மறைந்த நடிகரும், இயக்குனருமான மனோபாலா அவர்கள் கூட பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க முயற்சித்துள்ளாராம்.
இப்போது விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் னெ பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க படம் அண்மையில் வெளியானது.
பட பாக்ஸ் ஆபிஸ்
2ம் பாகம் வெளியான நாள் முதல் படத்திற்கு நல்ல வரவேற்பு தான் கிடைத்து வருகிறது. எல்லா மொழிகளிலும் படத்திற்கு ரசிகர்கள் வந்துவிட்டார்கள்.
தற்போது வரை படம் உலகம் முழுவதும் ரூ. 225 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். ஹிட் படமாக பொன்னியின் செல்வன் 2 அமைய இன்னும் ரூ. 75 கோடி வரை வசூலிக்க வேண்டும் என கூறப்படுகிறது.