பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடல் வெளியீடு.. ஜெயம் ரவியின் காதல் பாடலாம்
பொன்னியின் செல்வன்
மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் பொன்னியின் செல்வன். விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.
உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது.
இதற்கான அறிவிப்பு வீடியோ கூட சில வாரங்களுக்கு முன் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
முதல் பாடல்
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடல் வருகிற பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிட திட்டம்மிட்டுள்ளார்களாம்.
ஜெயம் ரவி ஏற்று நடிக்கும் அருள் மொழி வர்மன் கதாபாத்திரத்தின் காதல் காட்சியின் பாடல் என்பதால் காதலர் தினத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
உடல்நிலை சரியில்லாத சமந்தாவை வீட்டில் தங்கி பார்த்துக்கொண்டு நபர்.. விவாகரத்துக்கு பின் சமந்தா எடுத்த முடிவு

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
