பொன்னியின் செல்வன் 2 முதல் விமர்சனம், இதோ
பொன்னியின் செல்வன்
மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
எதிர்பார்த்ததை விட மாபெரும் அளவில் இப்படம் வெற்றிபெற்றது. வசூலில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2 வருகிற 28ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டதாக கூறிய வெளிநாட்டு சென்சார் குழு உறுப்பினரும், திரைப்பட விமர்சகருமான உமைர் சந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
PS2 விமர்சனம்
இதில் 'பொன்னியின் செல்வன் கண்டிப்பாக படுதோல்வியடையும்' என்று கூறியுள்ளார். ஆனால், இதுவரை வெளிநாட்டு சென்சார் குழுவிடம் படம் போகவில்லை என்றும், அதற்குள் எப்படி இவர் மட்டும் படம் பார்த்துவிட்டு விமர்சனம் கூறியுள்ளார் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
#PonniyinSelvan2 will be Sure Shot Disaster! Inside Reports are Crap ?#PS2 !
— Umair Sandhu (@UmairSandu) April 13, 2023
தொடர்ந்து திரை பிரபலங்கள் மீதும், படங்கள் குறித்தும் மோசமான விமர்சனம் தெரிவித்து வரும் உமைர் சந்து மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதன்முலம் பொன்னியின் செல்வன் 2 குறித்து உமைர் சந்து கூறியுள்ள விமர்சனம் பொய் என தெரியவந்துள்ளது.
ருத்ரன் திரைவிமர்சனம்