பொன்னியின் செல்வன் 3ம் பாகம் வருமா? ஜெயம் ரவி இப்படி சொல்லிட்டாரே
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது திரைக்கு வந்திருக்கிறது. முதல் பாகத்தை பார்த்த ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்த நிலையில் தற்போது படத்தை தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர்.
மொத்த படக்குழுவும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாடு முழுவுதும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். இன்று படம் ரிலீஸ் ஆகி இருக்கும் தியேட்டர்களில் ரசிகர்களுடன் ஜெயம் ரவி, திரிஷா, கார்த்தி உள்ளிட்டோரும் அமர்ந்து படம் பார்த்து இருக்கின்றனர்.
3ம் பாகம் வருமா
இந்நிலையில் PS 3ம் பாகம் வருமா என செய்தியாளர்கள் நடிகர் ஜெயம் ரவியிடம் கேட்டிருக்கின்றனர், அதற்கு அவர் சிரித்துவிட்டு 'BYE' என கூறிவிட்டு சென்றிருக்கிறார். அதுவரை பல கேள்விகளுக்கு பதில் சொன்ன அவர் இந்த கேள்விக்கு மட்டும் டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டார்.
இதற்க்கு முன்பே மணிரத்னம் PS 3ம் பாகம் படம் வருமா என்ற கேள்விக்கு, 'நிச்சயம் வரும், ஆனால் அதை யார் எடுப்பார்கள் என தெரியாது' என கூறி இருந்தார். அதனால் பொன்னியின் செல்வன் 3ம் பாகம் வர வாய்ப்பில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
சிவா மனசுல சக்தி 2ம் பாகம் எடுக்கும் ராஜேஷ்! கதை என்ன தெரியுமா