4 வார முடிவில் ஒட்டுமொத்தமாக பொன்னியின் செல்வன் செய்துள்ள வசூல்! அதிகரிக்கும் திரையரங்குகள்
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன்.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று உலகளவில் பெரிய வசூல் சாதனையை படைத்தது.

அதன்படி பொன்னியின் செல்வன் ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூலித்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர். மேலும் வரும் நாட்களில் 500 கோடியை தொட்டுவிடும் எதிர்பார்க்கபடுகிறது.
இந்நிலையில் தற்போது 4 வாரங்கள் முடிவில் பொன்னியின் செல்வன் தமிழகத்தில் மட்டும் இன்றுடன் ரூ.225 வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி மேலும் 75+ ஸ்கிரின்ஸ் இப்படத்திற்கு அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
