பொன்னியின் செல்வன் பட போர் காட்சியை பார்த்து எதுவும் சொல்லாமல் இருந்த மணிரத்னம் !
பெரிய பட்ஜெட்டில் பிரமாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, த்ரிஷா என ஏகப்பட்ட பிரபல நடிகர்களும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்து வரும் மனு ஷஜூ, இன்ஸ்டாகிராமில் இப்படத்தின் போர் காட்சிக்கு படத்தொகுப்பு செய்துள்ளது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "பொன்னியின் செல்வன் படத்தின் முக்கியமான போர்க் காட்சியை படத்தொகுப்பு செய்தேன். அதனை உடனடியாக மணிரத்னத்துக்கு காட்ட சென்றேன். ஒவ்வொரு காட்சியும் 7 கேமரா, ஹெலி கேம், கோப்ரோ கேமராவால் படமாக்கப்பட்டிருந்தது. அந்த போர் காட்சியில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
ஒரு காட்சியை படத்தொகுப்பு செய்து அதனை இயக்குநருக்கு காட்டும்போது அவர் என்ன உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் என தெரிந்துகொள்ள இயக்குநரின் முகத்தைப் பார்ப்பேன்.போர் காட்சிகளை மணிரத்னத்தின் சிறப்பான எழுத்து, பாகுபலி சண்டைப் பயிற்சி இயக்குநரின் வடிவமைப்பு, ரவி வர்மன் திறமையான ஒளிப்பதிவால் உருவாக்கப்பட்டிருந்தது.
இயக்குநர் மணிரத்னம் படத்தொகுப்பு செய்த காட்சியை பார்த்ததும் எதுவும் சொல்லவில்லை. உடனிருந்த ஜெயம் ரவி மணிரத்னத்திடம் எதுவோ சொல்லி, பின்னர் படத்தொகுப்பு செய்த காட்சியைப் பார்த்தார்.
ஜெயம் ரவியும் என்னிடம் எதுவும் சொல்லாமல், மணிரத்னத்திடம் மட்டும் அவரது கருத்துக்களை தெரிவித்தார். பின்னர் மணிரத்னம் என்னைப் பார்த்து சிரித்தபடி அவரது கட்டை விரலை உயர்த்தி காட்டினார்" என குறிப்பிட்டுள்ளார்.