பொன்னியின் செல்வன் அடுத்த சிங்கிள் ரிலீஸா! ARR- ட்வீட்டில் வைத்த சர்ப்ரைஸ்..
தன் முதல் படமான ரோஜா படத்தில் இசையமைத்ததன் மூலம் கோலிவுட்டை கடந்து பாலிவுட் வரை புகழ்ந்து பேசப்பட்டவர் இசைப்புயல் AR ரகுமான்.
இசையால் அனைவரையும் கட்டி போடும் அளவிற்கு இசைத்துறையில் பல சாதனைகளை படைத்திருக்கிறார்.
ஹிந்தி படமான ஸ்லம் டாக் மில்லியனைர் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கார் விருதை வென்றார். அதன் மூலம் நாடு கடந்து இந்திய இசையை ஆஸ்கார் மேடையில் ஒலிக்கச்செய்த பெருமைக்குரியவர்.
மணிரத்னம் ஷங்கர் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு மட்டுமல்லாமல் வளர்ந்துவரும் இளம் இயக்குனர்களின் படங்களுக்கும் இசையமைக்கும் ரகுமான் ஹிந்தியிலும் பல படங்களில் இசையமைத்து வருகிறார்.
தற்போது மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் இசையமைக்கும் இவர் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்வீட் தான் ரசிகர்களை குஷி ஆக்கியிருக்கிறது.
ARR தனது ட்வீட்டில் 'எனது தமிழ் படத்தின் sound track வருகிற December-ல் வெளியாகப்போகிறது. கெஸ் பண்ணுங்கள்' என்று கேள்வி கேட்டப்படி சஸ்பென்ஸ் வைத்துள்ளார். எனினும் ரசிகர்கள் இது பொன்னியின் செல்வன் படத்தின் பாடலா அல்லது வேறு எதாவது திரைப்படமா என கேட்டுவருகின்றனர்.
Guess which #தமிழ் soundtrack will release this December? #surprise
— A.R.Rahman (@arrahman) November 18, 2021