பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு நடக்கிறது தெரியுமா?
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்து வருகின்றனர். அந்த வகையில் இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு என ஏகப்பட்ட நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
பல கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் PS-1 மற்றும் PS-2 என இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கூட இப்படத்தில் அமைவுள்ள பின்னணி இசை குறித்து இயக்குனர் மணிரத்னம் இசைக்கலைஞர்களிடம் எடுத்துக்கூறும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இதனிடையே தற்போது பெரியளவில் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் இசைவெளியீட்டு விழா வெளிநாட்டில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
