பல கோடிக்கு விற்றுப்போன பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ ரைட்ஸ்.. எத்தனை கோடி தெரியுமா
பொன்னியின் செல்வன்
தமிழ் சினிமாவின் மாபெரும் படைப்பு பொன்னியின் செல்வன். இந்த கதையை தற்போது திரைப்படமாக மணி ரத்னம் உருவாக்கியுள்ளார்.
இப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
பிரமாண்டமாக தயாராகியுள்ள இப்படத்தின் டீசர் நேற்று மாலை வெளிவந்தது. இதில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியின் நம்மை மெய்சிலிர்க்க வைத்தது.
இதை தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடியோ ரைட்ஸ்
இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே சுமார் ரூ. 24 கோடிக்கும் டிப்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்முலம் தென்னிந்திய அளவில் அதிக விலைக்கு விற்றுப்போன முதல் திரைப்படம் இதுதான் என்று கூறப்படுகிறது.