ரூ. 1000 கோடி வசூலை எட்டுமா பொன்னியின் செல்வன்.. எகிறும் எதிர்பார்ப்பு
பொன்னியின் செல்வன்
மணி ரத்னம் இயக்கத்தில் மாபெரும் படைப்பாய் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, லால், சரத்குமார், பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்கள்.
நேற்று நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பொன்னியின் செல்வன் முதல் பாத்தின் ட்ரைலரும் வெளிவந்தது. பிரமாண்டத்திற்கு பஞ்சமில்லாமல் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை மெய்சிலிருக்க வைத்திருந்தார் மணிரத்னம்.
ரூ. 1000 கோடி வசூல்
வருகிற 30ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படம் எத்தனை கோடிகளை வசூல் செய்யும் என்று தற்போதே திரை வட்டாரத்தில் பேச்சு அடிபட துவங்கிவிட்டது.
இதில் இப்படம் கண்டிப்பாக ரூ. 1000 கோடி வரை வசூல் செய்வது நிச்சயம் என கோலிவுட் திரையுலக சேர்ந்த சில சினிமா ட்ராக்கள் கூறுகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் பொன்னியின் செல்வன் திரைப்படம் எத்தனை கோடிகளை வசூலில் அல்லி குவிக்க போகிறது என்று.