ரஜினியின் 2.0 படத்தின் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன்.. வசூலின் உச்சம்
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், பார்த்திபன் என தமிழ் திரையுலக பட்டாளமே நடித்திருந்தது. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இப்படம் கவர்ந்துள்ள இப்படம், வசூலில் மட்டுமே இதுவரை உலகளவில் பல நூறு கோடிகளை கடந்துள்ளது.
சாதனையை முறியடித்த PS1
தொடர்ந்து ஒவ்வொரு முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் வசூல் சாதனையை முறியடித்து வரும் பொன்னியின் செல்வன், ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 2.0 படத்தின் வசூல் சாதனையையும் முறியடித்துவிட்டது.

ஆம், அமெரிக்காவில் 2.0 திரைப்படம் $5.50 M வசூல் செய்திருந்தது. அந்த வசூலை கடந்து 2.0 படத்தின் சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.