அஜித் படத்திடம் மண்ணை கவ்விய பொன்னியின் செல்வன்.. இந்த படத்திற்கே இந்த நிலைமையா
மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்திருந்தனர்.
பல வருட தமிழ் சினிமா கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனை மக்கள் கொண்டாடி தீர்த்தனர்.
அதற்க்கு பலனாக இப்படம் சுமார் ரூ. 500 கோடி வரை வசூல் செய்தது என்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தனர். இப்படம் கடந்த 8ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பு ஆனது.
இந்நிலையில், தற்போது முதல் முறையாக ஒளிபரப்பான பொன்னியின் செல்வன் படத்தின் TRP ரேட்டிங் வெளிவந்துள்ளது.
அதன்படி 16.38 TRP ரேட்டிங்கை பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது. ஆனால், அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் 18.40 TRP ரேட்டிங் வைத்துள்ள நிலையில், விஸ்வாசம் படத்தின் சாதனையை பொன்னியின் செல்வன் முறியடிக்க தவறியுள்ளது.