பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முழு பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இதோ
பொன்னியின் செல்வன் படத்தின் முழு பட்ஜெட்
மணி ரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் கனவு பாடமான பொன்னியின் செல்வன் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
எம். ஜி.ஆரில் தொடங்கிய இப்படத்தின் பயணம் தற்போது மணி ரத்தனத்தின் கையால் நிறைவேறியுள்ளது.
லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன், கிஷோர் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து அனைவரையும் சிலிர்க்க வைத்தது. Youtubeல் தற்போது தொடர்ந்து பல சாதனைகளையும் புரிந்து வருகிறது.
இந்நிலையில், பிரமாண்ட பொருட்செலவில் தயாராகியுள்ள இப்படத்தின் பட்ஜெட் மட்டுமே சுமார் ரூ. 200 கோடிக்கும் மேல் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.