பொன்னியின் செல்வன் முன்பதிவிலேயே இத்தனை கோடி வசூல் வருமா?

By Parthiban.A Sep 25, 2022 04:00 PM GMT
Report

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து உள்ள படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன், ஜெயராம் என இந்த படத்தில் நடித்த நடிகர்கள் லிஸ்ட் மீக நீளம் தான். தற்போது அவர்கள் ப்ரோமோஷனுக்காக இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்கள்.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளவர்களில் யாருக்கு அதிகம் சம்பளம் என்கிற விவரம் வெளிவந்து இருக்கிறது. நடிகர் விக்ரம் தான் அதிகபட்சமாக 12 கோடி ருபாய் வாங்கி இருக்கிறாராம்.

பொன்னியின் செல்வன் முன்பதிவிலேயே இத்தனை கோடி வசூல் வருமா? | Ponniyin Selvan Ps1 Huge Reservation Collections

முன்பதிவிலேயே இத்தனை கோடி வசூலா

முதல் பாகம் PS 1 வரும் வெள்ளிக்கிழமை (செப். 30) ரிலீஸ் ஆகிறது. முன்பதிவு ஏற்கனவே தொடங்கி மிக பெரிய அளவில் நடந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகலில் முன்பதிவிலேயே நல்ல வசூல் வந்திருக்கிறது என்றும் செய்தி வந்திருகிறது.

முன்பதிவில் சில மணி நேரங்களில் இன்று மதியமே 78 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகி இருக்கிறது. அதன் மதிப்பு சுமார் 1.5 கோடி ஆகும். படத்தின் ரிலீசுக்கு முன்பே முன்பதிவில் 10 கோடி வரை வசூல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பொன்னியின் செல்வன் முன்பதிவிலேயே இத்தனை கோடி வசூல் வருமா? | Ponniyin Selvan Ps1 Huge Reservation Collections

அமலா பால் நீச்சல் குளத்தில் எல்லைமீறி கிளாமர் போஸ்! வைரல் புகைப்படங்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US