பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்தி நடித்த காட்சி ! முதல்முறையாக வெளியான புகைப்படம்..
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் வரலாற்று திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நடிப்பில் இப்படம் பெரியளவில் உருவாகியுள்ளது. அவர்களுடன் மேலும் பல முக்கிய நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
செட்ம்பர் 30 ஆம் தேதி PS-1 என பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து அதன் அடுத்த பாகமான PS-2 அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்திலிருந்து தொடர்ந்து புகைப்படங்கள் கசிந்து வருகிறது. மேலும் தற்ப்போது பொன்னியின் செல்வன் படத்தின் ரீ-ரெக்கார்டிங் பணி தொடங்கியுள்ளது குறித்து ட்ரம்ஸ் சிவமணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நடிகர் கார்த்தி நடித்த காட்சியின் புகைப்படம் உள்ளது. வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தியின் கதாபாத்திரம் எப்படி இருக்குமென ரசிகர்கள் அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்துள்ளனர்.
நடிகர் சூர்யா ஆஸ்கார் குழுவில் தேர்வானது குறித்து தமிழக முதல்வரே வெளியிட்ட பதிவு !