KGF 2 பட வசூலை முறியடித்த பொன்னியின் செல்வன்- தமிழகத்தில் மட்டுமே இவ்வளவு கலெக்ஷனா?
பொன்னியின் செல்வன்
கல்கி அவர்கள் நிறைய கதைகளை எழுதியுள்ளார், அதில் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டது பொன்னியின் செல்வன்.
புத்தகத்தில் வந்த கதையை படமாக எடுப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது, அதில் அவ்வளவு வேலை உள்ளது.
ஆனால் பல வருட முயற்சிக்கு பிறகு அதை சாதித்து காட்டியுள்ளார் மணிரத்னம். படம் ரிலீஸ் ஆனது முதல் படத்தை பற்றி அனைவரும் பேசிக்கொண்டு தான் வருகிறார்கள்.
தமிழகத்தில் வசூல் நிலவரம்
உலகம் முழுவதுமே படத்தை சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ப்ரீ புக்கிங்கில் வெளிநாடுகளில் படம் பல லட்சங்கள் வசூலித்து இருந்தன. தற்போது படம் ரிலீஸ் ஆகி 6 நாட்கள் ஆகின்றன, மொத்தமாக ரூ. 300 கோடியை எட்டிவிட்டது.
தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 120 கோடி வரை வசூலித்திருக்கிறது. இதன்மூலம் இந்த வருடத்தில் வெளியான டாப் வசூல் செய்த வலிமை, பீஸ்ட், KGF 2 படங்களின் தமிழக வசூல் சாதனையை முறியடித்து டாப் இடத்திற்கு வந்துள்ளது பொன்னியின் செல்வன்.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
