புதிய வசூல் சாதனை நோக்கி பொன்னியின் செல்வன்- இதுவரை இவ்வளவு வசூலித்ததா?
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் அவர்களின் கனவுப் படம் என்றே கூறலாம் பொன்னியின் செல்வன். இந்த படத்திற்காக பல வருடங்களாக முயற்சி செய்து இந்த வருடத்தில் ரிலீஸ் செய்து சாதனை படைத்துவிட்டார்.
எம்ஜிஆர் அவர்களின் காலத்தில் இருந்தே இந்த நாவலை படமாக எடுக்க பலர் முயற்சி எடுத்திருக்கிறார்கள், ஆனால் மணிரத்னத்தினால் மட்டுமே சாத்தியம் ஆகியுள்ளது.
ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், ஜெயராம் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ளார்கள், லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள். முதல் பாகம் வெற்றிகரமாக ரிலீஸ் ஆக மணிரத்னம் அவர்கள் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

பட வசூல்
உலகம் முழுவதும் ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்துள்ள இப்படம் மொத்தமாக ரூ. 500 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்பது சினிமா பிரபலங்களின் கணக்கு. தமிழகத்தில் இதுவரை படம் ரூ. 206 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
தீபாவளி வேறு வருகிறது, கண்டிப்பாக படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.
பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?- ஜி.பி முத்து, ஜனனிக்கு இவ்வளவா?