திடீரென தள்ளிப்போன பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட விழா ! என்ன காரணம் தெரியுமா?
தள்ளிப்போன பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் வரலாற்று திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நடிப்பில் இப்படம் பெரியளவில் உருவாகியுள்ளது. அவர்களுடன் மேலும் பல முக்கிய நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
செட்ம்பர் 30 ஆம் தேதி PS-1 என பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து அதன் அடுத்த பாகமான PS-2 அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வரும் ஜூலை 7 ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பிரம்மாண்ட டீசர் வெளியிட்டு விழா நடக்கவிருந்தது. அந்நிகழ்ச்சியில் அப்படத்தில் நடித்த ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் கலந்து கொள்ளவிருந்தனர்.
ஆனால் தற்போது அந்நிகழ்ச்சி ஜூலை 7 ஆம் தேதியில் இருந்து ஜூலை இறுதிக்கு தள்ளிப்போய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்களை கொள்ளைகொண்ட நடிகை கியாரா அதவானியின் போட்டோஷூட்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
