பொன்னியின் செல்வன் படத்தின் டப்பிங்கை தொடங்கிய முக்கிய நடிகை! யார் தெரியுமா?
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
பொன்னியின் செல்வன் PS 1 மற்றும் PS 2 என இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது, PS 1 படத்தின் புதிய பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகியிருந்தது.
மேலும் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்ததாக அறிவிப்பு போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது.
அதனை இப்படத்தின் நடித்த ஒட்டுமொத்த நடிகர்களும் தங்களின் இணையதள பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது நடிகை திரிஷா "டியர் செந்தமிழ்" என்ற கேப்ஷனுடன் பொன்னியின் செல்வன் படத்திற்கு டப்பிங் கொடுத்து வரும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
