பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் குறித்து வெளியான அப்டேட்!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் வரலாற்று திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி என ஏராளமான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் PS 1 மற்றும் PS 2 என இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது, PS 1 படத்தின் புதிய பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகியிருந்தது.
மேலும் இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி, ரகுமான் உள்ளிட்ட நடிகர்கள் தங்களின் பாகத்தை முடித்துள்ளதாகவும் அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து டீசர் முதலில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், பொன்னியின் செல்வன் மேக்கிங் வீடியோவை முதலில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.