முழுமையாக முடிந்த பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ் திரையுலகின் கனவு திரைப்படம் பொன்னியின் செல்வன். இதனை தற்போது இயக்குனர் மணி ரத்னம் பிரமாண்டமாக படமாக்கி வருகிறார்.
இப்படத்தில், விக்ரம், அமிதாப் பச்சன், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார் என திரையுலக பட்டாளமே நடித்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன் தான், பிரமாண்ட போஸ்டருடன் இப்படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுத்தார்கள்.
சமீபத்தில், இப்படத்தில் நடித்து வரும் நடிகர்கள், தங்களுடன் காட்சிகள் நிறைவடைந்தது என்று தங்களது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து வந்தனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டது என்று தற்போது அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
