வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 வருமா.. இயக்குனர் பொன்ராம் அதிரடி டுவிட்
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
இப்படத்தில் சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, சூரி, உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மேலும், இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது.
இந்நிலையில் இதுகுறித்து டுவிட் ஒன்றை அதிரடியாக இயக்குனர் பொன்ராம் வெளியிட்டுள்ளார்.
இதில் "வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 வருவது உறுதி, சிவகார்திகேயன் சார் maturity ஆகிவிட்டார், அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் எடுப்போம் போட்றா வெடி." என்று பதிவிட்டுள்ளார்.
#VaruthapadathaValiparSangampart2 வருவது உறுதி, சிவகார்திகேயன் சார் maturity ஆகிவிட்டார், அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் எடுப்போம்😊 போட்றா வெடிய… #vvs2 pic.twitter.com/KzLx6s73vE
— ponram (@ponramVVS) October 7, 2021