பீஸ்ட் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் படத்தில் பூஜா!
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட்.
இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது.
நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி திரைப்படத்தின் அறிமுகமாகி இருந்தாலும், தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளார்.
இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் பூஜா ஹெக்டே ஓப்பந்தம் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.