தளபதி விஜய்யுடன் நடிப்பது குறித்து, நடிகை பூஜா ஹெக்டே அளித்த பேட்டி!
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட்.
இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது.
நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி திரைப்படத்தின் அறிமுகமாகி இருந்தாலும், தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளார்.
இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே அளித்த சமீபத்திய பேட்டியில் "மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பது உற்சாகமாக உள்ளது, இதற்காக பல காலம் காத்திருந்தேன். அதுவும் தளபதி விஜய்யுடன்!
அவர் ஒரு சிறந்த நடிகர், பீஸ்ட் படத்தில் ஒரு பாடல் முடித்துள்ளேன். எனது அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது" என கூறியுள்ளார்.