பீஸ்ட் படப்பிடிப்பு முடிந்ததா, பூஜா ஹெக்டே கொடுத்த ஷாக்
பீஸ்ட் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.
நெல்சன் இயக்க, அனிருத் இசையமைத்து வருவதெல்லாம் தெரிந்த கதை தான், இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக இப்படத்தின் முதன் முறையாக பூஜா ஹெக்டே நடித்து வருகின்றார்.
இவர் தான் தற்போது தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகை, இவர் சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டா பக்கத்தில் கலந்துரையாடினார்.
அப்போது பீஸ்ட் படத்தில் தன்னுடைய போஷன் இன்னும் ஒரே ஷெடியூல் மட்டுமே, அதோடு என் போஷன் முழுவதும் முடிகிறது என்று கூறியுள்ளார்.
படமே இப்போது தான் ஆரம்பித்தார்கள், அதற்குள் பூஜா ஹெக்டே சம்மந்தப்பட்ட காட்சிகள் முடிகிறதா, ஒரு வேளை வெறும் பாடலுக்கு மட்டும் தான் வருவாரா, கதையில் பெரிய முக்கியத்துவம் இருக்காதா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.