இந்த பிளாப் படத்தால் தான் நடிகை பூஜா ஹெக்டேவிற்கு ரெட்ரோ பட வாய்ப்பு கிடைத்ததா?... அவரே கூறிய விஷயம்
சூர்யா
பெரிய பட்ஜெட்டில் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த படம் கங்குவா.
இப்படம் மாஸ் செய்யும் என படக்குழு தாண்டி ரசிகர்களும் எதிர்ப்பார்க்க கடைசியில் படம் நஷ்டத்தில் முடிந்தது. அப்படம் முடித்த கையோடு நடிகர் சூர்யா நாயகனாக நடித்துவரும் படம் ரெட்ரோ.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க மலையாள நடிகை ஜோஜு ஜார்ஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.
நடிகை பேச்சு
காதலும் ஆக்ஷனும் கலந்து வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகி இருக்கும் இப்படம் வரும் மே 1ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
ஒரு பேட்டியில் நடிகை பூஜா ஹெக்டே பேசும்போது, நான் நடித்த ராதே ஷியாம் படத்தில் குறிப்பிட்ட காட்சியில் தனது நடிப்பை பார்த்து இம்பிரஸ் ஆகிதான் தனக்கு கார்த்திக் சுப்புராஜ் ரெட்ரோ பட வாய்ப்பை கொடுத்ததாக கூறியுள்ளார்.
ராதே ஷியாம் படத்தின் ரிசல்ட் எதிர்பார்த்தபடி இல்லாவிட்டாலும் அப்படம் மூலம் தனக்கு இன்னொரு பட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என பூஜா தெரிவித்துள்ளார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
