சர்ச்சையில் சிக்கிய நடிகைகள் பூஜா ஹெக்டே மற்றும் ஹன்சிகா.. இணையத்தில் கிளம்பிய எதிர்ப்பு
திரை நட்சத்திரங்கள் படங்களில் சிகரெட் அல்லது மது அருந்துவது போல் காட்சி வந்தாலே சர்ச்சைகள் கிளம்பும். அதையும் தாண்டி சர்ச்சைக்குரிய சிகரெட் அல்லது மதுபான விளம்பரங்களில் முன்னணி திரை பிரபலங்கள் நடித்தால் பெரும் சர்ச்சையை வெடிக்கும்.
அப்படி இதுவரை பாலிவுட் திரையுலகில் உள்ள பல நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அந்த வகையில் தற்போது மதுபான சர்ச்சையில் நடிகைகள் பூஜா ஹெக்டே மற்றும் ஹன்சிகா இருவரும் சிக்கியுள்ளனர்.
நடிகைகள் பூஜா ஹெக்டே மற்றும் ஹன்சிகா இருவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் உணவுடன் மதுபாட்டிலை வைத்தும், கிளாசில் மது ஊற்றுவது போன்றும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர்.
திரைப்படங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது தீங்கானது என்று விளம்பரம் செய்யும் நிலையில் இவர்கள் இவருவரும் இப்படி மதுபானங்களை விளம்பரப்படுத்துவது தவறு என்று கூறி, பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.