இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை பூஜா ஹெக்டேவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இத்தனை கோடியா
பூஜா ஹெக்டே
தமிழில் வெளிவந்த முகமூடி தான் நடிகை பூஜா ஹெக்டேவின் முதல் திரைப்படமாகும். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதன்பின் தெலுங்கு திரையுலகிற்கு சென்ற பூஜா ஹெக்டே தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென்று தனி இடத்தை தெலுங்கு சினிமாவில் பிடித்தார்.

மேலும் ஹிந்தி படங்களிலும் நடித்தார். இதன்பின் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வந்த பூஜா, விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்தார். மேலும் தற்போது சூர்யாவின் 44வது படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி விஜய்யுடன் இரண்டாவது முறையாக தளபதி 69 படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடிகை பூஜா ஹெக்டேவின் 34வது பிறந்தநாள் என்பதினால் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், பூஜா ஹெக்டேவின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, சினிமா மூலம் நடிகை பூஜா ஹெக்டே சேர்த்து வைத்துள்ள மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 50 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 4 கோடி முதல் ரூ. 6 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறராம்.

நடிகை பூஜா ஹெக்டேவிற்கு சொந்தமாக Porsche Cayenne ரூ.2 கோடி , Jaguar ரூ. 60 லட்சம் மற்றும் Audi Q7 ரூ. 80 லட்சம் ஆகிய மூன்று சொகுசு கார்கள் உள்ளன. மேலும் மும்பையில் சமீபத்தில் 3BHK வீடு ஒன்றை பூஜா வாங்கியுள்ளார். இந்த வீட்டின் விலை ரூ. 6 கோடி என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri