"அவர்தான் என் வாழ்க்கைக்கு நல்ல கணவர்" - திருமணம் குறித்து மனம் திறந்திருக்கும் விஜய் பட நடிகை பூஜா ஹெக்டே
நடிகர் ஜீவாவுடன் தமிழில் முகமூடி படத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகியாக தன் கரியரை தொடங்கியவர் நடிகை பூஜா ஹெக்டே.
அதன் பின் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து அங்கே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார், ஹிந்தி படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார்.
தற்போது தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் விஜய்யிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் தமிழில் இவர் மீண்டும் என்ட்ரி கொடுக்கவிருக்கிறார்.
சமீபத்தில் இவர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனது திருமணம் குறித்து மனம் திறந்திருக்கிறார்.
இதில் "திருமண வயது வந்துவிட்டது என்பதற்காகவோ அல்லது திருமணம் செய்து கொள்ள இதுதான் சரியான நேரம் என்பதற்காகவோ திருமணம் செய்து கொள்வது கண்டிப்பாக சரியல்ல ".
மேலும் " வாழ்க்கை எல்லாம் சேர்ந்து இருக்க முடியும் என ஒரு மனிதரோடு இருக்கும்போது தோன்றினால் அப்போது அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர்தான் வாழ்க்கைக்கு நல்ல கணவராக இருப்பார் " என கூறியிருக்கிறார் பூஜா.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
