பீஸ்ட் தொடங்கி பல தோல்வி படங்கள்.. பூஜா ஹெக்டே முதல்முறையாக கொடுத்த பதிலடி
நடிகை பூஜா ஹெக்டே தற்போது தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் மிக பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். அவர் நீண்ட காலத்திற்கு பிறகு தமிழில் கம்பேக் கொடுத்த பீஸ்ட் படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதனால் பட வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதன் பின் பூஜா தெலுங்கில் நடித்த ஆச்சார்யா, ராதே ஷியாம் போன்ற படங்களும் தோல்வி அடைந்தன.
நான் காரணமா?
இது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பூஜா ஹெக்டேவிடம் கேட்டதற்கு "நான் தோல்வி அடையவில்லை, படங்கள் தான் தோற்றுவிட்டது. நான் என்ன அந்த படத்தின் இயக்குனரா இல்லை எடிட்டரா" என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
100% உழைப்பை கொடுத்துவிட்டதாகவும், தோல்விக்கு நான் காரணமில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார்.
படையப்பா படத்தின் வசூல் சாதனையை முறியடித்ததா கில்லி.. உண்மை இதுதான்