இரண்டு தோல்விக்கு பின்பும் தமிழ் படத்தில் நடிக்கவரும் பூஜா ஹெக்டே.. ஹீரோ யார் தெரியுமா
பூஜா ஹெக்டே
தமிழில் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.
இப்படம் தோல்வியை தழுவியதனால் பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகை என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டுள்ளது.
இதனால் தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்திய பூஜா பல வெற்றிப்படங்களை கொடுத்தார். தெலுங்கில் மட்டுமின்றி இந்தியிலும் வெற்றி நாயகியாக மாறினார்.
இதன்பின் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்த பூஜா, தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படமும் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை.
மீண்டும் தமிழில்
இந்நிலையில் இந்த இரு திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் தமிழில் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளாராம் பூஜா.
ஆர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கவிருக்கும் பையா 2 படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே தான் நடிக்கவுள்ளாராம்.
அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.
6 நாட்களில் வாத்தி படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவு