மும்பையில் புது வீடு வாங்கிய பூஜா ஹக்டே.. விலையை கேட்டால் தலைசுற்றும்
நடிகை பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் முகமூடி, பீஸ்ட் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். ஆனால் அவரால் பெரிய ஹிட் கொடுக்க முடியவில்லை.
மேலும் ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் அவர் நடிக்கும் படங்களுக்கும் இதே நிலை தான். கடைசியாக அவர் சல்மான் கான் ஜோடியாக Kisi Ka Bhai Kisi Ki Jaan என்ற படத்தில் நடித்து இருந்தார். தமிழில் அஜித் நடித்த வீரம் படத்தின் ரீமேக் தான் அது. அந்த படமும் தோல்வியை தான் தழுவியது.
புது வீடு வாங்கிய பூஜா ஹெக்டே
இந்நிலையில் பூஜா ஹெக்டே தற்போது மும்பையின் பாந்த்ரா பகுதியில் கடற்கரை அருகில் ஒரு seaview வீட்டை வாங்கி இருக்கிறார்.
4000 சதுர அடி இருக்கும் அந்த வீட்டை 45 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார் பூஜா ஹெக்டே. மேலும் இன்டீரியருக்கு செலவு செய்து அவர் வீட்டை சொகுசு மாளிகை போல மாற்றி இருக்கிறாராம்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
