அந்த நடிகருடன் சண்டையா? உண்மையை போட்டுடைத்த பீஸ்ட் ஹீரோயின்
விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார் பூஜா ஹெக்டே. இந்த படம் ரிலீஸ் ஆக சில வாரங்கள் இருந்தாலும் தற்போது அவர் நடித்த தெலுங்கு படமான ராதே ஷியாம் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் பேட்டி கொடுத்து வருகிறார்.
பிரபாஸ் ஜோடியாக தான் பூஜா ஹெக்டே நடித்து இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்த நேரத்தில் அவர் பிரபாஸ் உடன் சண்டை போட்டதாக செய்திகள் கசிந்தது.
பூஜா ஷூட்டிங்கிற்கு தாமதமாக வந்ததால் பிரபாஸ் அவரை திட்டினார் என்றும், அதனால் இருவருக்கும் நடுவில் சண்டை என தகவல் பரவியது. ஆனால் தயாரிப்பாளர்கள் அதை மறுத்தனர்.
அந்த செய்தி உண்மையா என தற்போது ஒரு பேட்டியில் கேட்டதற்கு 'எங்களுக்கு நடுவில் பிரச்சனை என சொல்வது ஆதாரமற்ற செய்தி' என கூறி இருக்கிறார். மேலும் பிரபாஸ் ரொம்ப இனிமையானவர் எனவும் பாராட்டி இருக்கிறார் அவர்.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri