பணம் தான் நடிகை பூஜா ஹெக்டேவிற்கு முக்கியமா? நடிகையின் விளக்கம்
பூஜா ஹெக்டே
இந்தியளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் அண்மையில் சர்க்கஸ் எனும் ஹிந்தி திரைப்படம் வெளிவந்தது.
மேலும் இந்த ஆண்டு தமிழில் இவர் நடித்து வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை பூஜா ஹெக்டே குறித்து தகவல் ஒன்று சமீபத்தில் வெளிவந்தது. கதை நன்றாக இருந்தாலும், பூஜா கேட்கும் சம்பளம் தரவில்லை என்றால், அவர் அந்த படத்தில் நடிக்கமாட்டார் என்று கூறப்பட்டது.
சர்ச்சைக்கு விளக்கம்
இதற்க்கு பதிலளிக்கும் விதமாக பேட்டி கொடுத்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. இதில் " கதை நன்றாக இருந்தாலும் நான் கேட்ட சம்பளம் தராவிட்டால் அந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று பரவி வரும் தகவல் உண்மையில்லை. பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து நான் நடிக்கவில்லை.
அப்படி இருந்திருந்தால், இவ்வளவு தூரம் நான் வந்திருக்குமுடியாது. நல்ல படங்களை தேர்வு செய்வது நடிகைகளுக்கு சவாலாக உள்ளது. சம்பளத்தை முக்கியமாக வைத்து கிடைத்த படங்களில் நடித்தாலும், காணாமல் போய்விடுவோம் " என்று கூறியுள்ளார். இதன்முலம் பெரும் சர்ச்சைக்கு நடிகை பூஜா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வைரவனை தொடர்ந்து மற்றொரு வெண்ணிலா கபடி குழு பட நடிகரும் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
