ஒர்கவுட்டில் அசத்தும் நடிகை பூஜா ஹெக்டே.. இணையத்தில் தீயாய் பரவிய வீடியோ
தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே.
நடிக்க துவங்கிய காலகட்டத்தில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வந்த இவர், தற்போது விஜய், பிரபாஸ் என முன்னணி நட்சத்திரங்களுடன் பிசியாக நடித்து வருகிறார்.
ஆம், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இது இவருக்கு இரண்டாவது தமிழ் திரைப்படம்.
இதற்கு முன் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி படத்தில் நடித்திருந்த பூஜா, மீண்டும் பல ஆண்டுகள் கழித்து தமிழில் நடித்து வருகிறார்.
திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள கடினமான ஒர்கவுட்களை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது, தான் ஒர்கவுட் செய்த புதிய வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறார். இதோ அந்த வீடியோ..
Slow and controlled movements. Try that next time ?? #fitwithanappetite #slowmotion pic.twitter.com/3HHcO38KMB
— Pooja Hegde (@hegdepooja) January 7, 2022